Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசியை இலவசமாக போடுவதற்கு அரசு திட்டமிட்டாலும் கூட, விலை கொடுக்க வேண்டியது வரும்

கொரோனா தடுப்பூசியை இலவசமாக போடுவதற்கு அரசு திட்டமிட்டாலும் கூட, விலை கொடுக்க வேண்டியது வரும்

By: Karunakaran Wed, 23 Sept 2020 3:14:16 PM

கொரோனா தடுப்பூசியை இலவசமாக போடுவதற்கு அரசு திட்டமிட்டாலும் கூட, விலை கொடுக்க வேண்டியது வரும்

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அமெரிக்காவில் 68.58 லட்சம் பேரை பாதித்துள்ள இந்த தொற்று, ஏறத்தாழ 2 லட்சம் பேரின் உயிர்களை பலி வாங்கி உள்ளது. இதனால் அங்கு தடுப்பூசியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் வரும் நவம்பர் 3-ந் தேதி நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக போடுவதற்கு கொரோனா வைரஸ் உதவி மற்றும் பொருளாதார பாதுகாப்பு சட்டம், கடந்த மார்ச் மாதம் இயற்றப்பட்டது. இது மெடிகேர் சுகாதார காப்பீட்டு திட்டத்தின்கீழ் வருகிறவர்களுக்கு பலன் அளிக்க வகை செய்துள்ளது.

government,corona vaccine,america,trump ,அரசு, கொரோனா தடுப்பூசி, அமெரிக்கா, டிரம்ப்

தற்போது ‘வால்ஸ்டிரீட்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள சுகாதார காப்பீட்டு திட்டம், அவசர கால பயன்பாட்டு பெயர்களில் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கான செலவுகளை ஈடுகட்டாததால், இது கோடிக்கணக்கான மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை போட அரசு விரும்பினாலும், மக்கள் அதற்கான விலையை தங்கள் சொந்தப்பணத்தில் இருந்து தர வேண்டியது வரும் என்பதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை உணர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், சுகாதார காப்பீட்டு திட்டத்தில் அவசரகால பயன்பாட்டு பெயர்களில் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கான செலவுகளை ஈடுகட்டும் வகையில் கொரோனா வைரஸ் உதவி மற்றும் பொருளாதார பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தை வாஷிங்டன் வெள்ளை மாளிகை வலியுறுத்தும் என தெரிகிறது. அமெரிக்காவில் 4 கோடியே 40 லட்சம் மக்கள் உள்ளதாகவும், 15 சதவீதத்தினர் மெடிகேர் சுகாதார திட்டத்தின்கீழ் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :