Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா போகாது; வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா போகாது; வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்

By: Nagaraj Thu, 28 May 2020 9:26:54 PM

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா போகாது; வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்

கொரோனா நம்மை விட்டு போகாது... தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் உலகத்தை விட்டு போகாது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க ஆராய்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். முதன் முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் , கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 13-வது இடத்திற்கு சென்று விட்டது.

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

corona,vaccine,among us,be,experts ,கொரோனா, தடுப்பூசி, நம்மிடையே, இருக்கும், வல்லுநர்கள்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் உலகத்தை விட்டு போகாது என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
எதிர்வரும் சில நூற்றாண்டுகளுக்கு கொரோனா வைரஸ் நம்மிடையே இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

அதாவது காலம் காலமாக நம்மிடையே இருக்கும் தட்டம்மை, எச்.ஐ.வி வைரஸ் போல் இருக்கும் என தெரிவித்துள்ளனர். அது தவிர ஏற்கனவே நான்கு வகையான கொரோனா வைரஸ் இருப்பதையும் வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆகவே அவற்றில் ஒன்றாக ஐந்தாவது கொரோனா வைரஸாக நம்மிடையே இருந்து விடும்.

கொரோனாவால் நிலைமை எப்போதுமே மோசமாக இருக்கும் என்று அர்த்தமல்ல. நோய் எதிர்ப்பு சக்தி பரவுவதால் கொரோனா வைரஸை தாக்குப் பிடிக்கும் அளவுக்கு நம் உடல்கள் காலப்போக்கில் சக்தி பெற்று விடும் என கூறியுள்ளனர்.

Tags :
|
|