Advertisement

விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3500 கோடி நஷ்டம்

By: Nagaraj Wed, 16 Dec 2020 9:24:52 PM

விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3500 கோடி நஷ்டம்

தினமும் ரூ.3500 கோடி வரை நஷ்டம்... தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, இமாசலபிரதேச மாநில பொருளாதாரத்தில் தினசரி ரூ. 3 ஆயிரம் கோடி முதல் ரூ. 3,500 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது.

சரக்குப் போக்குவரத்து முடங்கியுள்ளது. பல பொருட்கள் தேங்கியுள்ளன. அதிக நேரமும் கூடுதல் தூரமும் சரக்கு லாரிகள் பயணிக்க வேண்டியுள்ளது. பஞ்சாப், ஹரியானா, இமாசலபிரதேச மாநிலங்களில் உள்ள கிடங்குகளிலிருந்து பொருட்களை எடுத்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.

பஞ்சாப், ஹரியானா, இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாதிப்புக்குள்ளான ஒட்டுமொத்த பொருளாதாரம் ரூ. 18 லட்சம் கோடியாகும். ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், விளையாட்டு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

indian industry,federation,daily,loss,deficit ,இந்திய தொழிலகம், கூட்டமைப்பு, தினசரி, நஷ்டம், பற்றாக்குறை

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களும் தேங்கியுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசேம் தலைவர் நிரஞ்சன் ஹிராநந்தானி தெரிவித்துள்ளார். சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அத்துடன் தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதாகவும் சாலை மார்க்கமாக மட்டுமே செல்லும் ஜம்மு காஷ்மீர் இந்த போராட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தொழிலக கூட்டமைப்பின் வடக்குப் பிராந்திய தலைவர் நிகில் சஹானி தெரிவித்துள்ளார்.

Tags :
|
|