Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமித்ஷாவின் புரட்சிகரமான அறிவிப்பை அனைவரும் வரவேற்கின்றனர்

அமித்ஷாவின் புரட்சிகரமான அறிவிப்பை அனைவரும் வரவேற்கின்றனர்

By: Nagaraj Mon, 12 June 2023 11:12:13 PM

அமித்ஷாவின் புரட்சிகரமான அறிவிப்பை அனைவரும் வரவேற்கின்றனர்

சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷாவின் புரட்சிகரமான அறிவிப்பை அனைவரும் வரவேற்கின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு முறை பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. அதை கெடுத்தது திமுக தான். ஆனால் தமிழகத்தில் இருந்து பிரதமரை பாஜக உருவாக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

அமித்ஷாவின் இந்த பேச்சு தமிழகத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என அமித்ஷா பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், தமிழனை பிரதமராக்குவேன் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் அதன் நோக்கம் புரியவில்லை என்றார்.

amit shah,announcement,p chidambaram,tweet, ,அமித் ஷா, அறிவிப்பு, டுவீட், ப.சிதம்பரம்

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவில் உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஒரு தமிழரை நாட்டின் பிரதமராக்குவார் என அறிவித்துள்ளார். இந்த புரட்சிகரமான அறிவிப்பை அனைவரும் வரவேற்கின்றனர். 2024 தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தமிழனை பிரதமராக்குவேன் என்று கூறியதாக பதிவிட்டுள்ளார்.

திமுக எம்.பி., கனிமொழி டுவிட்டர் பதிவில், தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Tags :
|