Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள்

பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள்

By: Nagaraj Mon, 09 Jan 2023 09:14:52 AM

பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள்

சண்டிகர்: மாஜி ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு... காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் முன்னாள் ராணுவ தளபதி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

ராகுல்காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் அவருடன் இணைந்து கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது அரியானாவை சென்றடைந்துள்ளது.

rahul gandhi,yatra,ex-servicemen,participation,randeep singh ,ராகுல்காந்தி, யாத்திரை, முன்னாள் ராணுவத்தினர், பங்கேற்பு, ரன்தீப் சிங்

கடந்த 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பாரத் ஜோடோ யாத்திரை அரியானா வழியாக சென்ற நிலையில் தற்போது மீண்டும் யாத்திரை அரியானாவுக்குள் நுழைந்துள்ளது.

கடும் குளிர், அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில், கர்னாலின் நிலோகேரி பகுதியில் உள்ள தோட்வாவிலிருந்து இன்று காலை பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது. பின்னர் குருஷேத்ரா மாவட்டத்திற்குள் நுழைந்தது.

சரத்பவார் கட்சியின் மூத்த தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் குமாரி செல்ஜா ஆகியோர் யாத்திரையில் பங்கேற்றனர்.

Tags :
|