Advertisement

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு தேதி வெளியீடு

By: vaithegi Sat, 19 Nov 2022 2:11:34 PM

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு தேதி வெளியீடு

சென்னை: தேர்வு தேதி வெளியீடு .... தமிழக அரசு வருவாய்த் துறை கடந்த அக்டோபர் மாதம் தனது துறையின் கீழ் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணிக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிலும் குறிப்பாக விண்ணப்பதாரர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த பணிக்கு பொதுப்பிரிவில் 21 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர்கள் 37 வயது வரை விண்ணப்பிக்க சலுகை வழங்கப்பட்டது.

village assistant jobs,exam ,கிராம உதவியாளர் பணி,தேர்வு

இதனை அடுத்து இத்தகைய தகுதி உடையவர்கள் ஆன்லைன் வாயிலாக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த அக்.10ம் தேதி முதல் நவ.7ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

இநநிலையில் இன்று வருவாய் துறையின் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு தேதி வெளியாகியுள்ளது. அதில் வரும் டிசம்பர் 4ம் தேதி எழுத்து தேர்வு நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tags :