Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் .....தேர்வுத்துறை அறிவிப்பு

10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் .....தேர்வுத்துறை அறிவிப்பு

By: vaithegi Wed, 15 June 2022 7:38:18 PM

10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் .....தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.

அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணை வெளியிடப்பட்டது. மேலும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் குறைவாக நடைபெற்றதால் பொதுத்தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது.

மேலும், பொதுத்தேர்வுக்குரிய பாடங்களை நடத்தி முடிப்பதற்கு வாரத்தில் 6 நாட்கள் வரை வகுப்புகள் நடத்தப்பட்டது. அதாவது, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வகுப்புகள் நடைபெற்றது. இதனையடுத்து தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி பொதுத்தேர்வுகள் எந்தவித இடையூறுமின்றி நல்ல முறையில் நடைபெற்றது. அதன்படி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வின் முடிவுகளுக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

general examination,exam results,students ,பொதுத்தேர்வு,தேர்வு முடிவு,மாணவர்கள்

மேலும் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த உள்ளனர். ஏனெனில் தேர்வு முடிவுகளை பொறுத்து 11ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவு எடுக்க முடியும்.

இது தொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன அதன் படி , 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர். அத்துடன் பாடவாரியான மதிப்பெண்கள் இணையத்தில் வெளியிடப்படும் என்றும் இதனை மாணவர்கள் www.deg.tn.gov.in அல்லது www.tnresults.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Tags :