Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இனி 13 மாநில மொழிகளில் தேர்வு நடத்தலாம்... மத்திய அரசு தந்த ஒப்புதல்

இனி 13 மாநில மொழிகளில் தேர்வு நடத்தலாம்... மத்திய அரசு தந்த ஒப்புதல்

By: Nagaraj Wed, 19 Apr 2023 12:44:08 PM

இனி 13 மாநில மொழிகளில் தேர்வு நடத்தலாம்... மத்திய அரசு தந்த ஒப்புதல்

புதுடில்லி: மத்திய அரசு ஒப்புதல்... மத்திய அரசின் பணிகளுக்கான தேர்வுகள் இனி தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் மத்திய அரசின் பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தேர்வு, நடத்தப்படுகிறது.

இதையடுத்து இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் என்று 2 மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தேர்வு இனி தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

central staff,training department examination,central govt ,மத்திய பணியாளர் ,பயிற்சி துறை தேர்வு,மத்திய அரசு

மத்திய அரசின் பணிகளில் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும், மேலும் மொழிதடையால் ஒருவரது உரிமை பறிபோகக்கூடாது என்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதனால் கிராமப்புறங்களிலிருந்து வரும் இளைஞர்கள், தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதி பலனடைய வேண்டும் என்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது.

எனவே மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இனி தேர்வு குறித்த அறிவிப்பு வரும் பட்சத்தில் இந்த முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய ஆயுத படை தேர்வான, சிஏபிஎப் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

Tags :