Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் சிறந்த நன்மை

அமெரிக்க மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் சிறந்த நன்மை

By: Nagaraj Thu, 30 July 2020 9:21:16 PM

அமெரிக்க மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் சிறந்த நன்மை

மாடர்னாவின் கொரோனா தடுப்பூசியை குரங்குகளுக்கு போட்டு பரிசோதிக்கப்பட்டதில் சிறந்த பலனை கொடுத்துள்ளது.

அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னாவின் கொரோனா தடுப்பூசியை குரங்குகளுக்கு போட்டு பரிசோதித்ததில், அது புதிய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதுடன், சுவாச மண்டலத்தில் கொரோனா வைரசுகள் பரவுவதை கட்டுப்படுத்துவதும் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

vaccine,phase 3 testing,usa,registration,infection ,தடுப்பூசி, 3 ஆம் கட்ட சோதனை, அமெரிக்கா, பதிவு, தொற்றுநோய்

எட்டு குரங்குகளுக்கு 28 நாள் கால இடைவெளியில் 10 மைக்ரோகிராம் என்ற அளவுக்கு 2 தடுப்பூசிகள் போடப்பட்டன. அப்போது, கொரோனா வைரசின் புரதம் மனித செல்லில் ஒட்டிப்பிடிப்பதை ஒழிப்பதற்கான ஆன்டிபாடீஸ் உருவானது தெரியவந்துள்ளது.

மாடர்னா மற்றும் அமெரிக்காவின் ஒவ்வாமை-தொற்றுநோய் தேசிய கழக விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கி உள்ள இந்த தடுப்பூசிக்கு mRNA-1273 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் 3 ஆம் கட்ட சோதனை அமெரிக்காவின் பல மருத்துவமனைகளில் கடந்த திங்கள் அன்று துவங்கியது. சுமார் 30000 பேர் இந்த சோதனையில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.

Tags :
|