Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை தொற்றை கையாள்வதில் சிறப்பான செயல்பாடு; கனடாவுக்கு பாராட்டு

கொரோனாவை தொற்றை கையாள்வதில் சிறப்பான செயல்பாடு; கனடாவுக்கு பாராட்டு

By: Nagaraj Thu, 30 July 2020 5:09:39 PM

கொரோனாவை தொற்றை கையாள்வதில் சிறப்பான செயல்பாடு; கனடாவுக்கு பாராட்டு

உலக சுகாதார அமைப்பு பாராட்டு... உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை கையாள்வதில் சிறப்பாக செயற்பட்ட கனடாவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:

appreciation,world health organization,canada,corona ,பாராட்டு, உலக சுகாதார அமைப்பு, கனடா, கொரோனா

“கொவிட்-19 நம் உலகத்தை மாற்றியுள்ளது. இது மக்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களை ஒன்றிணைத்து அவர்களை ஒதுக்கித் தள்ளியுள்ளது. நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மனிதர்களுக்கு என்ன திறன் உள்ளது என்பதை இது காட்டுகிறது” என கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 994ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 912பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

Tags :
|