Advertisement

அமீபா தொற்று ஏற்பட்டு சிறுவன் பலியானதால் பரபரப்பு

By: Nagaraj Wed, 30 Sept 2020 12:14:57 PM

அமீபா தொற்று ஏற்பட்டு சிறுவன் பலியானதால் பரபரப்பு

பேரிடராக அறிவிப்பு... அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமீபா தொற்றால் 6 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, பேரிடராக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஒரு செல் உயிரியான அமீபா, தண்ணீர் மூலம் மனித உடலுக்குள் சென்று தீங்கு ஏற்படுத்தக் கூடியவை. மூளையைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்த வல்லது. லேக் ஜேக்சன் நகரில் கடந்த 8 ஆம் தேதி ஜோசியா என்ற 6 வயது சிறுவன் பலியானதற்கு, அமீபா தொற்றே காரணம் என்று தெரியவந்துள்ளது.

amoeba infection,boy kills,action,disaster ,அமீபா தொற்று, சிறுவன் பலி, நடவடிக்கை, பேரிடர்

தண்ணீரில் சிறுவன் விளையாடிய போது அமீபா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டெக்ஸாசில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பேரிடராக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒரு பக்கம் கொரோனா பரவல் அதிகரித்துக் கொணடே செல்லும் நிலையில் தற்போது அமீபா தொற்று ஏற்பட்டு சிறுவன் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|