Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

By: Karunakaran Mon, 20 July 2020 4:33:39 PM

அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரானின் முக்கிய ராணுவத் தலைவர்களில் ஒருவராக சொலைமானி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன், ஈராக் எல்லையில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானதாக்குதல் மூலம் சொலைமானி கொல்லப்பட்டார். இதில் மற்றும் சில முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. சொலைமானி கொல்லப்படுவதற்கு முன் அவரது நடமாட்டம் குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ.-விற்கு ஈரானைச் சேர்ந்த முகமது மௌசாமி மஜ்த் என்பவர் உளவு பார்த்து தகவல் கூறியதாக குற்றம்சாட்டப்ட்டது.

america,iran,man accused,spy ,அமெரிக்கா, மரண தண்டனை,குற்றம் சாட்டப்பட்டவர், உளவு

இதனால் ஈரானைச் சேர்ந்த முகமது மௌசாமி மஜ்த் என்பவர் கைது செய்யபட்டார். மேலும் இவர் இஸ்ரேலின் உளவுத்துறைக்கும் உளவு பார்த்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, இன்று காலை முகமது மௌசாமிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரானில் தற்போது அங்குள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ தொழிற்சாலைகளில் தொடர்ந்து வெடிவிபத்து மற்றும் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம்ச்சாட்டி வருகிறது.

Tags :
|