Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிமாநிலத்தவர் புதுச்சேரிக்கு வரலாம்...முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

வெளிமாநிலத்தவர் புதுச்சேரிக்கு வரலாம்...முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

By: Monisha Wed, 26 Aug 2020 11:03:12 AM

வெளிமாநிலத்தவர் புதுச்சேரிக்கு வரலாம்...முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது . ஊரடங்கு காரணமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தங்கள் மாநிலத்துக்குள்ளும், மாவட்டங்களுக்குள்ளும் செல்ல இ-பாஸ் முறையை அமல்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் இ-பாஸ் நடைமுறையை ஏற்கனவே மத்திய அரசு அறிவித்ததுபோல் ரத்துசெய்யவேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தியது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த 23-ந்தேதி முதல் இ-பாஸ் வழங்குவது கைவிடப்பட்டது. அதற்கான இணையதளத்தின் முகப்பிலேயே மத்திய அரசின் உத்தரவு வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் தமிழகம் போன்ற மாநிலங்களில் இன்னும் இ-பாஸ் நடைமுறை உள்ளது. புதுவையில் இ-பாஸ் வழங்கப்படாததன் காரணமாக புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

curfew,e pass,puducherry,chief minister narayanasamy ,ஊரடங்கு,இ பாஸ்,புதுச்சேரி,முதல்வர் நாராயணசாமி

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:- புதுவையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர் புதுச்சேரிக்கு வரலாம். அவர்களுக்கு புதுவை எல்லையில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

புதுவை மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் விண்ணப்பித்து அவர்கள் வழங்கும் இ-பாஸ் மூலம் அந்த மாநிலங்களுக்கு செல்லலாம். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Tags :
|
|