Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பு; சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பு; சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

By: Monisha Fri, 09 Oct 2020 09:49:48 AM

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பு; சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் 9-வது கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் வருகிற 15-ந் தேதி முதல் நாடு முழுவதும் தியேட்டர்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, கடந்த 6-ந் தேதி வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதில், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். தியேட்டருக்கு உள்ளே நுழையும் இடத்திலும், வெளியேறும் இடத்திலும், பொதுவான பகுதிகளிலும் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். நுழைவுவாசலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை கண்காணிக்கப்பட்டு, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

corona virus,curfew,theaters,cleanup,thermal scanner ,கொரோனா வைரஸ்,ஊரடங்கு,தியேட்டர்கள்,சுத்தப்படுத்தல்,தெர்மல் ஸ்கேனர்

எனினும், தமிழக அரசு சார்பில் தியேட்டர்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்த பின்னரே தியேட்டர்கள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

இருப்பினும், தமிழகத்திலும் 15-ந் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து மாவட்டங்களிலும் தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் 6 மாத காலத்திற்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால், தூசி படிந்து காணப்படும் இருக்கைகளை சுத்தம் செய்தல், பழுதான இருக்கைகளை மாற்றுவது, சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags :
|