Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா முழுவதும் காணப்படும் இருமல், காய்ச்சல் குறித்து நிபுணர்கள் தகவல்

இந்தியா முழுவதும் காணப்படும் இருமல், காய்ச்சல் குறித்து நிபுணர்கள் தகவல்

By: Nagaraj Mon, 06 Mar 2023 10:16:53 AM

இந்தியா முழுவதும் காணப்படும் இருமல், காய்ச்சல் குறித்து நிபுணர்கள் தகவல்

புதுடில்லி: இருமல், காய்ச்சலுக்கு காரணம்... கடந்த இரண்டு-மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் தொடர்ந்து காணப்படும் இருமல், சில சமயங்களில் காய்ச்சலுடன் இருப்பது இன்ஃப்ளூயன்ஸா A துணை வகை H3N2 காரணமாகும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு-மூன்று மாதங்களாக பரவலான புழக்கத்தில் உள்ள H3N2, மற்ற துணை வகைகளைக் காட்டிலும் அதிகமாக மருத்துவமனையில் அடையாளம் காணப்படுகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வைரஸ் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலையும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மறுபுறம், நாடு முழுவதும் இருமல், சளி மற்றும் குமட்டல் போன்ற பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கண்மூடித்தனமாக ஆண்டிபயாடிக்ஸை பயன்படுத்துவதற்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் (IMA) அறிவுரை கூறியுள்ளது.

fever,cough,antibiotic restriction,medical club,will be prohibited ,காய்ச்சல், இருமல், ஆண்டிபயாடிக் தடை, மருத்துவக்கழகம், தடைப்படும்

காய்ச்சல் மூன்று நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும். ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் ஆண்டிபயாடிக்ஸ் நிலைக்குழு தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக வைரஸ் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இது பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. காய்ச்சலுடன் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது என்று அது கூறியது.

மருத்துவர்கள் அறிகுறி சிகிச்சையை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்றும் ஆண்டிபயாடிக்ஸை பரிந்துரைக்க வேண்டாம் எனவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்தது. "இப்போதே, மக்கள் அசித்ரோமைசின் மற்றும் அமோக்ஸிக்லாவ் போன்ற ஆண்டிபயாடிக்ஸை எடுத்துக் கொள்ளத் தொடங்குகிறார்கள். அதுவும் டோஸ் மற்றும ப்ரிகுவன்சி பற்றி கவலைப்படாமல், உடல் நன்றாக உணர ஆரம்பித்தவுடன் அதை நிறுத்துகிறார்கள்.

இது ஆண்டிபயாடிக் தடைக்கு வழிவகுக்கும் என்பதால் இதை நிறுத்த வேண்டும். ஆண்டிபயாடிக்கின் பயன்பாடு தேவைப்படும்போது, அது முழுவதுமாக தடைபட வாய்ப்புள்ளது. இதுபோன்றவற்றால் தேவையான நேரத்தில் ஆண்டிபயாடிக் மொத்தமாக தடைப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|