Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்வு .. தடுப்பு மருந்துகள் குறித்து நிபுணர்களின் கருத்துக்கள் தெரிவிப்பு

டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்வு .. தடுப்பு மருந்துகள் குறித்து நிபுணர்களின் கருத்துக்கள் தெரிவிப்பு

By: vaithegi Tue, 26 Sept 2023 5:19:04 PM

டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்வு   ..  தடுப்பு மருந்துகள் குறித்து நிபுணர்களின் கருத்துக்கள் தெரிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே இதன் காரணமாக சில உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. இதே போன்று அண்டை மாநிலங்களிலும் டெங்கு காய்ச்சல் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

இதையடுத்து டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர அதிக வீரியம் நிறைந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் பல்வேறு மருத்துவ நிறுவனங்களும் ஈடுபட்டு தோல்வியை மட்டுமே சந்தித்து கொண்டு வருகின்றது.

antibiotics,dengue fever , தடுப்பு மருந்துகள் ,டெங்கு காய்ச்சல்


இதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் கூறும் கருத்தாவது, டெங்கு காய்ச்சல் ஆனது 4 விதமாக உள்ளது. இவற்றில் ஒருவகை காய்ச்சல் தடுப்பு மருந்தானது மற்ற வகை காய்ச்சலை கட்டுப்படுத்துவதில்லை. இதன் காரணமாகவே உலக அளவில் ஒரே தடுப்பூசியை கண்டறிவது ஒரு பெரும் சோதனையாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிய மருத்துவர் சௌமியா தெரிவித்து உள்ளார்.

மேலும் உலக அளவில் குறுகிய நாட்களில் அதிக அபாயத்தை உண்டு பண்ணிய கொரோனா தாக்கத்திற்கு கூட தடுப்பு மருந்துகள் கை கொடுத்த போதிலும், டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகளை உலகின் பல நிறுவனங்களும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டும் அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. எனவே மக்கள் சுய பாதுகாப்பு முறைகளின் மூலமாக மட்டுமே டெங்கு காய்ச்சலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது ஆய்வின் முடிவுகளில் தெரிய வருகிறது.

Tags :