Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசியை அமெரிக்க அரசு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக நிபுணர்கள் கவலை

கொரோனா தடுப்பூசியை அமெரிக்க அரசு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக நிபுணர்கள் கவலை

By: Karunakaran Fri, 04 Sept 2020 09:36:07 AM

கொரோனா தடுப்பூசியை அமெரிக்க அரசு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக நிபுணர்கள் கவலை

உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்நிலையில் அங்கு வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும் போட்டியிடும் ஜனாதிபதி டிரம்ப், தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்துவிட வேண்டும் என தீவிரமாக இருக்கிறார்.

கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், அதன் மக்களின் நம்பிக்கையை பெற்று வெற்றி பெற முடியும் என ஜனாதிபதி டிரம்ப் நம்புகிறார். அமெரிக்காவில் உள்ள அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மூன்றாவது கட்ட சோதனையை எட்டி உள்ளது. இந்நிலையில் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மூன்றாவது கட்ட சோதனை முடிவதற்கு முன்பே அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் ஹான் கூறியுள்ளார்.

experts,us government,corona vaccine,public domain ,நிபுணர்கள், அமெரிக்க அரசு, கொரோனா தடுப்பூசி, பொது மக்கள்

அக்டோபர் மாதத்திலேயே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பிலடெல்பியா குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர் பால் ஆப்பிட், மூன்றாவது கட்ட பரிசோதனையை நடத்தாமலேயே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்றால், அந்த மருந்தின் செயல்பாடு பற்றிய முழு தகவலும் எப்படி தெரியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பேய்லர் பல்கலைக்கழக துணை வேந்தர் பீட்டர் ஹோட்டஸ் கூறுகையில், தடுப்பு மருந்து வேலை செய்யுமா? முழு அளவில் பாதுகாப்பானதுதானா? என்பது தெரியும் முன்பே அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க இருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் நிபுணர் மைக்கேல் ஆஸ்டர்ஹோம், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதை ‘அக்டோபர் ஆச்சரியம்‘ என்றுதான் கூற வேண்டும் என கூறியுள்ளார்.

Tags :