Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் கட்டண கணக்கீடு குறித்து மின் வாரியம் அளித்த விளக்கம்

மின் கட்டண கணக்கீடு குறித்து மின் வாரியம் அளித்த விளக்கம்

By: Nagaraj Wed, 15 July 2020 11:03:23 PM

மின் கட்டண கணக்கீடு குறித்து மின் வாரியம் அளித்த விளக்கம்

மின் கட்டண கணக்கீடு குறித்து விளக்கம்... 2 மாதங்களுக்கான கணக்கீட்டிலும் தனித்தனியாக 100 யூனிட்டுகள் கழிக்கப்படுகின்றன இதுவே மின்சார கட்டணம் அதிகம் வருவதற்கு காரணம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

நான்கு மாத காலத்திற்கான மின் நுகர்வு இரண்டு மாதங்களுக்கான வீதப்பட்டி அடிப்படையில் சமமாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மின் நுகர்வு இரண்டு மாதங்களுக்கான வீதப்படி மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

electricity bill,description,calculation,previous month,amount ,மின் கட்டணம், விளக்கம், கணக்கீடு, முந்தைய மாதம், தொகை

கணக்கீடு செய்யும்போது அதில் தனித்தனியே ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான நுகர்விலும் தலா 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு செலுத்தவேண்டிய தொகை கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில் ஏற்கனவே மார்ச்/ ஏப்ரல் 2020 மாதங்களில் முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது.

மேலே கூறியபடி கணக்கீடு செய்ததில் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை அதிகமாக இருப்பின், நுகர்வோரின் எதிர்வரும் கணக்கீட்டில் அந்த தொகை சரி செய்யப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Tags :