Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக தரப்பில் பந்த் அழைப்பு குறித்து கோர்ட்டில் விளக்கம்... விசாரணை தள்ளி வைப்பு

பாஜக தரப்பில் பந்த் அழைப்பு குறித்து கோர்ட்டில் விளக்கம்... விசாரணை தள்ளி வைப்பு

By: Nagaraj Fri, 28 Oct 2022 5:59:08 PM

பாஜக தரப்பில் பந்த் அழைப்பு குறித்து கோர்ட்டில் விளக்கம்... விசாரணை தள்ளி வைப்பு

புதுடில்லி: 31ஆம் தேதி பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக அழைப்பு விடுத்துள்ள ஒரு நாள் பந்த்-க்கு தடை விதிக்க வேண்டும், சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் என கோவையை சேர்ந்த தொழிலதிபர் வழக்கு தொடர்ந்தார்.

judges,explanation,bandh,not announced,adjournment,hearing ,நீதிபதிகள், விளக்கம், பந்த், அறிவிக்கப்படவில்லை, ஒத்தி வைப்பு, விசாரணை

இது விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வரும்போது போது இதுபோன்ற பந்த்-க்களை நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கில் எதிர்மனுதாரராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், இந்த பந்த் என்பது தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மூலமாக தான் அக்.,31ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநில தலைமையால் அழைப்பு விடுக்கப்படவில்லை, அதனை ஆதரிக்கவும் இல்லை என்று விளக்கம் அளித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள் எவ்வித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காமல் வழக்கு விசாரணையை நவம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் இருதரப்பு விளக்கங்களை அளியுங்கள் என்று தெரிவித்தனர்.

Tags :
|
|