Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கடைகளில் பொருள் வாங்காதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு குறித்து விளக்கம்

ரேஷன் கடைகளில் பொருள் வாங்காதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு குறித்து விளக்கம்

By: Nagaraj Wed, 21 Sept 2022 4:49:48 PM

ரேஷன் கடைகளில் பொருள் வாங்காதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு குறித்து விளக்கம்

சென்னை: கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன்? தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

cooperatives,ration shop staff,activities,materials,survey ,கூட்டுறவுத்துறை, ரேஷன் கடை ஊழியர்கள், நடவடிக்கை, பொருள்கள், கணக்கெடுப்பு

இதற்கு, குடும்பஅட்டை வைத்திருப்போரில் பொருள்கள் வாங்காதவர்களை ஒழுங்குப்படுத்தவே கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.ஒரு வேளை, குடும்ப அட்டை வைத்திருந்து, பொருள்கள் வாங்காவிட்டால் கௌரவ அட்டை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்கும் போது சோப்பு உள்ளிட்ட மற்ற பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு கட்டடாயப்படுத்தும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Tags :