Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவையிலிருந்து 3-வது முறையாக சார்ஜாவுக்கு காய்கறிகள், பூக்கள் ஏற்றுமதி

கோவையிலிருந்து 3-வது முறையாக சார்ஜாவுக்கு காய்கறிகள், பூக்கள் ஏற்றுமதி

By: Monisha Tue, 16 June 2020 6:09:36 PM

கோவையிலிருந்து 3-வது முறையாக சார்ஜாவுக்கு காய்கறிகள், பூக்கள் ஏற்றுமதி

கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும் சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. சரக்குகளை ஏற்றி செல்லும் விமானங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. ஊரடங்கின்போது கோவையில் இருந்து சார்ஜாவுக்கு விமானம் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் இரண்டு முறை ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த நிலையில் கோவையில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் காய்கறிகள், பூக்கள் மற்றும் சமையல் எண்ணை சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

vegetables,flowers,export,coimbatore,sharjah ,காய்கறிகள்,பூக்கள்,ஏற்றுமதி,கோவை,சார்ஜா

முன்னதாக, கோவை பூமார்க்கெட்டில் இருந்து மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களும், கேரள மாநிலத்திலிருந்து நேந்திரன் காய்கள் பேக்கிங் செய்யப்பட்டு லாரி மூலம் கோவை கொண்டு வரப்பட்டன. அதன்பின்னர் மொத்தம் 16 டன் காய்கறி, பூக்கள் மற்றும் பழங்கள் சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன

காய்கறிகள் அனைத்தும் கோவை மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கோவை பூமார்க்கெட்டிலிருந்து பூக்களும் அனுப்பி வைக்கப்பட்டன. கோவையிலிருந்து நேற்று 3-வது முறையாக சார்ஜாவுக்கு காய்கறிகள், பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|