Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விரைவு போக்குவரத்து கழக டிரைவர் – கண்டக்டர் பணி... ஹால் டிக்கெட் குறித்து வெளியான அறிவிப்பு

விரைவு போக்குவரத்து கழக டிரைவர் – கண்டக்டர் பணி... ஹால் டிக்கெட் குறித்து வெளியான அறிவிப்பு

By: Nagaraj Wed, 15 Nov 2023 4:06:33 PM

விரைவு போக்குவரத்து கழக டிரைவர் – கண்டக்டர் பணி... ஹால் டிக்கெட் குறித்து வெளியான அறிவிப்பு

சென்னை: ஹால் டிக்கெட் குறித்த அறிவிப்பு... விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர்-கண்டக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும் டிரைவர் – கண்டக்டர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்தவர்களுக்கும் நவ.19-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

driver,conductor,selection,transport ,டிரைவர், கண்டக்டர், போக்குவரத்து, ஹால் டிக்கெட்

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் தொழில்நுட்ப உதவி மையமான 04447749002 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான அனுமதி அட்டை பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

Tags :
|