Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கருத்துக்களை வெளியிடுவதும் சட்ட விரோதமாகி விட்டது... ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கருத்துக்களை வெளியிடுவதும் சட்ட விரோதமாகி விட்டது... ராகுல் காந்தி குற்றச்சாட்டு

By: Nagaraj Sat, 06 Aug 2022 6:46:40 PM

கருத்துக்களை வெளியிடுவதும் சட்ட விரோதமாகி விட்டது... ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி: கருத்துகளை வெளியிடுவதும் சட்ட விரோதமாகிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.

விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சிகளை பழிவாங்க மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துவது ஆகிய பிரச்னைகளுக்காக, காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும், கறுப்பு உடை அணிந்து காங்., - எம்.பி.,க்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

illegality,bjp,wanted,india,struggle,ideas ,சட்ட விரோதம், பாஜ., விரும்பியது, இந்தியா, போராட்டம், கருத்துக்கள்

அப்போது, ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல முயற்சித்த காங்., - எம்.பி., ராகுல் கைது செய்யப்பட்டார். கட்சி தலைமையகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்காவையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து ராகுல் கூறியதாவது: இந்தியாவில் போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் ஆகிவிட்டது. கருத்துகளை தெரிவிப்பதும் சட்ட விரோதமாகி விட்டது. பா.ஜ., தான் விரும்பியதை எல்லாம் செய்து வருகிறது எனக்கூறினார்.

Tags :
|
|
|