Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது தளர்த்தலாமா? - மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது தளர்த்தலாமா? - மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

By: Monisha Fri, 29 May 2020 12:09:39 PM

ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது தளர்த்தலாமா? - மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 10,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அமலில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்கள் பணிகளை தொடங்கி உள்ளன. பொது போக்குவரத்து தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது.

tamil nadu,coronavirus,district collectors,chief minister edappadi palanisamy,curfew ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,மாவட்ட கலெக்டர்கள்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,ஊரடங்கு

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 31-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது தளர்த்தலாமா? என்பது குறித்து கலெக்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

பொது போக்குவரத்து சேவைக்கான சாத்தியக் கூறு இருக்கிறதா? எனவும் கலெக்டர்களிடம் முதலமைச்சர் கருத்துக்களை கேட்டறிந்தார்.

Tags :