Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இருந்து விமானங்கள் வர தடை நீடிப்பு - கொல்கத்தா உள்துறை செயலாளர்

சென்னையில் இருந்து விமானங்கள் வர தடை நீடிப்பு - கொல்கத்தா உள்துறை செயலாளர்

By: Karunakaran Fri, 31 July 2020 12:27:39 PM

சென்னையில் இருந்து விமானங்கள் வர தடை நீடிப்பு - கொல்கத்தா உள்துறை செயலாளர்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம், டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2.40 லட்சத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தலைநகர் சென்னையில் முதலிடம் வகிக்கிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்க உள்ளது.

kolkata,home secretary,flights,chennai ,கொல்கத்தா, உள்துறை செயலாளர், விமானங்கள், சென்னை

தற்போது, சென்னையில் இருந்து விமானங்கள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கொல்கத்தா உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொல்கத்தா உள்துறை முதன்மை செயலாளர் மத்திய விமான போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 15 வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :