Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு

சென்னையில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு

By: Monisha Wed, 12 Aug 2020 09:20:24 AM

சென்னையில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு

சென்னையில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. தமிழக தலைநகர் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முதலிடம் வகிக்கிறது. சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

chennai,kolkata,airlines,west bengal,corona virus ,சென்னை,கொல்கத்தா,விமானங்கள்,மேற்கு வங்காளம்,கொரோனா வைரஸ்

இந்நிலையில், சென்னையில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்காள அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ள நகரங்களான டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய மாநிலங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானங்கள் வருவதற்கான தடை வரும் 31-ம் தேதி வரை தொடரும் என தெரிவித்துள்ளது.

Tags :