Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த தேதி வரை காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த தேதி வரை காவல் நீட்டிப்பு

By: vaithegi Sun, 13 Aug 2023 10:45:50 AM

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த தேதி வரை காவல் நீட்டிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை 12ம் தேதி வரை 5 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து, செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையிலிருந்த நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாத்துறையின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அதனியத்து அப்போது, செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அன்றை தினமே இரவு புழல் சிறையிலிருந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று செந்தில் பாலாஜியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

police,minister senthil balaji ,காவல் ,அமைச்சர் செந்தில் பாலாஜி

இதையடுத்து கடந்த 4 நாட்களாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டிருந்தது. இதற்கு இடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படுகிறது எனவும், விசாரணை அறைக்கு வெளியே மருத்துவர்கள் இருப்பதாவும் கூறப்பட்டது.

இச்சூழலில் கடந்த 7-ஆம் தேதி இரவு முதல் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணைக்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நீதிமன்றத்தில் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது உள்ளதோடு, செந்தில் பாலாஜியிடம் மேலும் 5 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்து உள்ளனர்.

Tags :
|