Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

By: vaithegi Sun, 12 Mar 2023 10:57:37 AM

க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

இந்தியா: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) முறை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பாண்டுக்கான க்யூட் தேர்வு மே 21 முதல் 31-ம் தேதி வரை கணினி வழியாக நடத்தப்பட உள்ளது. எனவே இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுவதாக என்டிஏ அறிவித்திருந்தது.

cute,period ,க்யூட் , கால அவகாசம்

இதையடுத்து தற்போது பல தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் மார்ச் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் /cuet.samarth.ac.in/ என்ற வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் ஏதேனும் சிரமம் இருந்தால் 011 - 40759000/ 69227700 என்றதொலைபேசி எண்கள் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம். `இதையடுத்து இதுதொடர்பான கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதன் இடையே க்யூட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவன் ராஜாஜி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் இலவச உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags :
|