Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

By: vaithegi Mon, 10 July 2023 09:29:28 AM

எம்பிபிஎஸ்.,  பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் ஆன்லைனில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியது.

www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வந்தனர். ஜூலை 10ஆம் தேதியான இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

mbbs.,bds course ,எம்பிபிஎஸ்.,  பிடிஎஸ் படிப்பு

இச்சூழலில் மாணவ மற்றும் மாணவிகள் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இதுவரை மட்டும் அரசு ஒதுக்கீட்டுக்கு 21,560 மாணவர்களும் , நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9,400 பேர் என்று மொத்தம் 31 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் 2 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேலும் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|