Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

By: vaithegi Tue, 27 Sept 2022 10:19:14 AM

1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டு வருகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் அளவில் முதல் பருவ தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கல்வி ஆண்டுக்கான விடுமுறை விவரங்கள் காலாண்டு, அரையாண்டு ,பொதுத் தேர்வு தகவல்கள் நாள்காட்டியை பள்ளிகள் திறக்கும் முன்னரே தமிழக அரசு வெளியிட்டது.

எனினும் சூழலுக்கு ஏற்ப அதில் மாற்றம் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து அந்த வகையில் காலாண்டு தேர்வு தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் நடைபெறும் என இதற்கான கால அட்டவணை வினாத்தாள்கள் ஆகியவை முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தயாரித்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

quarterly holidays,schools ,காலாண்டு விடுமுறை,,பள்ளிகள்


இதையடுத்து இந்த நிலையில் தமிழ்நாட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 முதல் 12 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடப்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் எண்ணும் எழுத்தும் செயலி வழியாக தொகுத்தறிவு மதிப்பீடு நடத்தப்படும், மாணவர்களுக்கு காலாண்டு, ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 6 முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. எனவே அதற்கு ஏற்ப விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அக்டோபர்9ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை என அக்டோபர் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்தது.

Tags :