Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகைக்கான கால அவகாசம் ஜூலை 10ம் தேதி வரை நீட்டிப்பு

தமிழக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகைக்கான கால அவகாசம் ஜூலை 10ம் தேதி வரை நீட்டிப்பு

By: vaithegi Thu, 30 June 2022 4:38:55 PM

தமிழக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகைக்கான கால அவகாசம் ஜூலை 10ம் தேதி வரை நீட்டிப்பு


தமிழகம்: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் கல்வி இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மாதந்தோறும் மாணவிகளின் வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இத்தகைய திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அரசு பள்ளிகளிலேயே ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு பயில நினைக்கும் மாணவிகள் இத்திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 பெற்றுக் கொள்ளலாம்.

இது மட்டுமல்லாமல் இந்த கல்வியாண்டு முதலே அரசு பள்ளிப் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் நிதியுதவி வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அரசு பள்ளி மாணவிகள் ரூ.1000 உதவித்தொகை பெறுவது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இதைதொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் இது தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இதுவரைக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பித்துள்ளனர்.

scholarships,government school students ,உதவித்தொகை,அரசுப் பள்ளி மாணவிகள்

மேலும், கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவிகளின் சான்றிதழ்களை கல்வி முதல்வர்கள் பெற்று ஒப்படைக்குமாறு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, உயர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்றும், அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உடனே விண்ணப்பிக்கும்படியும் முன்னதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்படும் மாணவர்களின் விண்ணப்பங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு தகுதியான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இந்த நிதித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், உயர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 10ம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :