Advertisement

செமஸ்டர் கட்டணம் செலுத்தும் அவகாசம் நீட்டிப்பு

By: Nagaraj Fri, 04 Sept 2020 8:36:08 PM

செமஸ்டர் கட்டணம் செலுத்தும் அவகாசம் நீட்டிப்பு

அவகாசம் நீட்டிப்பு... செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பட்டது. அதில், நடப்பு செமஸ்டர் கட்டணத்தை வருகின்ற ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென்றும் கட்டணம் செலுத்த தவறிய மாணவர்கள் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் செலுத்த வேண்டும்.

செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த தவறினால் அந்த மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர விரும்பவில்லை என்று கருதப்பட்டு மாணவர்கள் பெயர்கள் செப்டம்பர் 6-ஆம் தேதி பதிவேட்டில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அந்த அறிக்கையில் தெரிவித்தது.

Tags :