Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கான பணிக்காலம் நீட்டிப்பு

அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கான பணிக்காலம் நீட்டிப்பு

By: vaithegi Fri, 22 Sept 2023 1:54:21 PM

அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கான பணிக்காலம் நீட்டிப்பு

சென்னை: தற்காலிக ஆசிரியர்கள் பணி காலம் நீட்டிப்பு ... தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்படைகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து அவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

மேலும் தேவையை கருத்தில் கொண்டு தற்காலிக ஆசிரியர்களின் பணி காலம் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது 3,660 தற்காலிக ஆசிரியர்களின் பணி காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

tenure,temporary teachers ,பணிக்காலம் ,தற்காலிக ஆசிரியர்கள்

அதாவது புதிதாக தரம் அதிகரிக்கப்பட்ட அரசு பள்ளிகளில் 3000 தலைமை ஆசிரியர் மற்றும் 2,460 முதுகலை ஆசிரியர்கள் என சுமார் 2,760 தற்காலிக ஆசிரியர்களின் பணி காலம் 2026 -ம் வரை நீட்டிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதை தொடர்ந்து 2011 – 2013 ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் 900 தற்காலிக ஆசிரியர்களின் பதவி காலம் 2027 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. ஆசிரியர்களுக்கான ஊதியம் மாதந்தோறும் தாமதம் என கிடைக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்..


Tags :
|