Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வருகிற 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வருகிற 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

By: vaithegi Sat, 23 July 2022 3:42:22 PM

அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வருகிற 27ம் தேதி வரை கால அவகாசம்  நீட்டிப்பு

இந்தியா : பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் அரசு கலை கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடந்த மாதம் முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. அதன்படி இதுவரை பொறியியல் படிப்பில் சேர 1.91 லட்சம் பேரும், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர சுமார் 3.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியா அடுத்து சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க முடியாத நிலை இருந்து வந்தது.

duration,extension ,கால அவகாசம்  ,நீட்டிப்பு , பொறியியல் கல்லூரி

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்களுக்குள் வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் கடந்த 8ம் தேதி அறிவித்திருந்தார்.

இதனால் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வருகிற 27ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டி உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது வரை மட்டும் 3 லட்சம் மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர் என்று உயர்கல்வி துறை தெரிவித்திருந்தது.

Tags :