Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா...திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா...திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

By: Monisha Sat, 11 July 2020 12:23:01 PM

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா...திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 8 லட்சத்து 20 ஆயிரத்து 916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், மத்தியபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது 3,099 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

kerala,coronavirus,curfew,trivandrum,vulnerability ,கேரளா,கொரோனா வைரஸ்,ஊரடங்கு,திருவனந்தபுரம்,பாதிப்பு

திருவனந்தபுரத்தில் பூந்துறை பகுதியில் மிக வேகமாக நோய் பரவி வருகிறது. கேரளா தற்போது நோய்ப் பரவலில் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளதாகவும் சமூகப் பரவல் என்ற அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|