Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கு வங்களம் ..கடுமையான வெப்பம் ..பள்ளிகளை காலை நேரத்திற்கு மாற்ற கோரிக்கை

மேற்கு வங்களம் ..கடுமையான வெப்பம் ..பள்ளிகளை காலை நேரத்திற்கு மாற்ற கோரிக்கை

By: vaithegi Wed, 20 July 2022 6:43:12 PM

மேற்கு வங்களம் ..கடுமையான வெப்பம் ..பள்ளிகளை காலை நேரத்திற்கு மாற்ற  கோரிக்கை

மேற்கு வங்களம் : மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் மிக கடுமையான வெப்ப அலை காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொல்கத்தா உட்பட மாநிலத்தின் சில தெற்குப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டாலும், வடக்கு வங்காளத்தில் உள்ள பள்ளிகள் ஆப்லைன் முறையில் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், மாநிலத்தில் நிலவும் மிக கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் வடக்குப் பகுதியை சேர்ந்த பள்ளிகள் செயல்பட்டு வருவதால் பள்ளிகளை மூடக் கோரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

west bengal,extreme heat ,மேற்கு வங்களம்,கடுமையான வெப்பம்

இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ டாக்டர் ஷங்கர் கோஷ் எழுதியுள்ள கடிதத்தில், ‘கடந்த சில நாட்களாகவே வடக்கு வங்காளத்தில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. இந்த நிலையில், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பிரிவு மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் பெரும் சிரமம் இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். மேலும் செய்தித் தாள்களில் வெளியான தகவலின்படி ஒரு கல்லூரி மாணவர் வெப்ப அலையால் இறந்துள்ளார்’ என கூறப்பட்டுள்ளது. மேலும் ஆரம்ப மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு பள்ளிகளை காலை அமர்வுக்கு மட்டும் திறக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதன் இடையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் உடல்நலம் வெப்ப அலைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சில தளர்வுகளை வழங்குமாறு கல்வி அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் பள்ளி நேரங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள், சீருடைகள் குறித்த விதிமுறைகளை தளர்த்தலாம் என்றும் தோல் காலணிகளுக்கு பதிலாக கேன்வாஸ் காலணிகளை அனுமதிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :