Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய சிறைகளில் தயாரிக்கப்படும் முகக்கவசம் ரூ.5-க்கு விற்பனை

மத்திய சிறைகளில் தயாரிக்கப்படும் முகக்கவசம் ரூ.5-க்கு விற்பனை

By: Monisha Sat, 06 June 2020 10:04:03 AM

மத்திய சிறைகளில் தயாரிக்கப்படும் முகக்கவசம் ரூ.5-க்கு விற்பனை

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் (மாஸ்க்) அணி அறிவுறுத்தப்பட்டனர். முகக்கவசத்தின் தேவையை கருத்தில் கொண்டு தட்டுப்பாடு இல்லாமல் பொது மக்களுக்கு கிடைக்க மத்திய சிறைகளில் கைதிகள் மூலம் முகக்கவசம் தயாரிக்கப்பட்டது. இதனை தலா ரூ.10-க்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது ஒரு முகக்கவசத்தின் விலை ரூ.5 எனக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை தலைமை டி.ஐ.ஜி முருகேசன் கூறியதாவது:- சிறைகளில் மொத்தம் 4 லட்சத்து 29 ஆயிரத்து 654 முகக்கவசங்கள் தற்போது கையிருப்பில் உள்ளன. முகக்கவசம் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ரூ.10-க்கு விற்கப்பட்ட முகக்கவசத்தின் விலையை பொதுமக்களின் நலன்கருதி பாதிக்குப் பாதியாக குறைத்து ரூ.5-க்கு விற்பனை செய்து வருகிறோம்.

central prisons,face mask,prisoners,rs 5,sale ,மத்திய சிறைகள்,முகக்கவசம்,கைதிகள்,ரூ 5,விற்பனை

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தனி நபர்கள் உள்ளிட்டோர் அந்தந்த பகுதிகளிலுள்ள மத்திய சிறை நிர்வாகத்தை அணுகி, தங்களுக்குத் தேவையான அளவு முகக்கவசங்களை குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக மேலும் விவரங்கள் பெற விரும்புவோர் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 044-26590615 (புழல் சிறை), 0416-2233472 (வேலூர் சிறை), 04142-235027(கடலூர் சிறை), 0431-2333213 (திருச்சி சிறை), 0452-2360301(மதுரை சிறை), 0462- 2531845(பாளையங்கோட்டை சிறை), 0422-2303062(கோவை சிறை). இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|