Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா எதிரொலி .. அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்

கொரோனா எதிரொலி .. அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்

By: vaithegi Sat, 01 Apr 2023 09:53:46 AM

கொரோனா எதிரொலி   ..  அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் ..தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கையை மீண்டும் மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து முகக்கவசம் உள்ளிட நோய் தடுப்புக்காக நடவடிக்கை பற்றி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி கொண்டு வருகின்றனர்.

face mask,corona ,முகக்கவசம் ,கொரோனா

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் 100% முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ளார்.

எனவே அதன்படி, அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்ளிட்டோர் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags :