உலகின் பல நாடுகளில் ஒரு மணிநேரம் இயங்காத பேஸ்புக், இன்ஸ்டாகிராம்
By: Nagaraj Sat, 19 Sept 2020 3:39:39 PM
ஒரு மணிநேரம் இயங்கவில்லை... உலகம் முழுவதும் உள்ள ஆன்ட்ராய்டு பிரியர்களுக்கு வந்த ஒரு மணிநேரம் பிரச்னை ஏற்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உலகின் பல்வேறு நாடுகளில் ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் இரண்டினைப் பயன்படுத்த முடியவில்லை. அதாவது ஆசிய கண்டம் முழுவதிலும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளில் இந்த செயலிழப்பு நிகழ்ந்துள்ளது. ஒரு மணி நேரம் உலகமே ஸ்தம்பித்து விட்டது.
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பட்சத்தில், இந்த இரண்டில் குறைந்தபட்சம் இரண்டைப் பயன்படுத்தாத யாரையும் பார்க்க முடியாது.
ஸ்மார்ட்
போன் மீதான மோகத்திற்கு பல காரணங்கள் இருப்பினும், அவற்றில் முக்கிய பங்கு
வகிப்பது இந்த மூன்று அப்ளிகேஷன்களே ஆகும். போனில் மிகப் பெரிய ஆதிக்கம்
செலுத்தும் இந்த அப்ளிகேஷனில் முடக்கம் என்றால் நெஞ்சம் கணக்கத்தான்
செய்கிறது.
அதுவும் ஒரே நேரத்தில் முடக்கம் ஏற்படுவதால், வாழ்க்கை
ஸ்தம்பித்துவிடுகிறது. அதற்குக் காரணம் வேறு எதுவும் இல்லை. இவை இரண்டும்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் அப்ளிகேஷன்கள், அதனால் ஒன்றில் சர்வர் பிரச்சினை
ஏற்பட்டால், மற்றொன்றும் பாதிக்கப்படுகிறது.