Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 4ம் கட்ட ஊரடங்கில் தொழில்சாலைகளுக்கு தளர்வுகள் அறிவிப்பு

4ம் கட்ட ஊரடங்கில் தொழில்சாலைகளுக்கு தளர்வுகள் அறிவிப்பு

By: Nagaraj Sun, 17 May 2020 10:52:20 PM

4ம் கட்ட ஊரடங்கில் தொழில்சாலைகளுக்கு தளர்வுகள் அறிவிப்பு

தொழில்சாலைகளுக்கு தளர்வு... 100க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் ஆலைகளில் 50 % அல்லது குறைந்தபட்சம் 100 % பேர் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 31-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் 25 மாவட்டங்களில் சில தளர்வுகள் அதிகரிக்கப்படுகிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

factories,permit,minimum,workers,report ,தொழிற்சாலைகள், அனுமதி, குறைந்தபட்சம், தொழிலாளர்கள், அறிக்கை

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக (Maintenance) மட்டும் குறைந்த பட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
|