Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காதல் தோல்வி... மது உள்ளே போச்சு; இளம் பெண் நடு ரோட்டில் ரகளையில் இறங்கியாச்சு

காதல் தோல்வி... மது உள்ளே போச்சு; இளம் பெண் நடு ரோட்டில் ரகளையில் இறங்கியாச்சு

By: Nagaraj Sun, 02 Apr 2023 3:45:12 PM

காதல் தோல்வி... மது உள்ளே போச்சு; இளம் பெண் நடு ரோட்டில் ரகளையில் இறங்கியாச்சு

மத்திய பிரதேசம்: காதல் தோல்வியில் மது போதையில் ரகளை... மத்திய பிரதேசம் மாநிலத்தின் குவாலியர் நகரில், நடுரோட்டில் அங்குமிங்கும் உலவியபடி, இளம் வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த பெண் செய்யும் ரகளை காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் இப்படி நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. இருந்தாலும், இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.

gwalior,twitter,love failure,alcohol addiction,raharu,young woman ,குவாலியர், டுவிட்டர், காதல் தோல்வி, மது போதை, ரகளை, இளம் பெண்

அந்த வீடியோவில், நடுரோட்டில் ஸ்கூட்டரில் ஒருவர் செல்லும்போது அவரை இறக்கிவிட்டு இந்த பெண் அந்த ஸ்ட்டரில் ஏறி ஓட்ட முயல்வதும், அடுத்து நடுரோட்டில், கார் ஒன்றின் மேலே ஏறி நின்று கத்துவதும் என ரோட்டில் அங்குமிங்கும் சென்றபடி ரகளை செய்கிறார். போதாக்குறைக்கு, சாலை தடுப்பு போர்டுகளை கீழே தள்ளிவிடுவது என அதகளப்படுத்தி உள்ளார்.

பெண்கள் சிலர் சேர்ந்து அவரை அங்கிருந்து அழைத்துச்செல்ல நினைத்தும் அவர்களுக்கும் அடங்கவில்லை. இறுதியாக அங்கு கூடியிருந்தவர்கள் அவருக்கு சொல்லி புரியவைக்கும்படியாக அந்த வீடியோ முடிகிறது.

இந்த வீடியோவை @kmrvikash11 என்ற டுவிட்டர் பயனர், 'காதல் தோல்வியால் பெண் செய்த கலாட்டா... இது குவாலியரின் பூல் பாக் சந்திப்பில் நடந்த சம்பவம்' என்று எழுதி பகிர்ந்துள்ளார்.

Tags :
|