Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த தவறினால் நிச்சயம் கைது - மணிப்பூர் முதல்வர் அதிரடி

தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த தவறினால் நிச்சயம் கைது - மணிப்பூர் முதல்வர் அதிரடி

By: Monisha Sat, 23 May 2020 3:16:55 PM

தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த தவறினால் நிச்சயம் கைது - மணிப்பூர் முதல்வர் அதிரடி

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. எனினும், 4-ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளதால், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் பொதுப்போக்குவரத்தை அனுமதித்து வருகின்றன.

அதுமட்டுமல்லாது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப அவர்களுக்காக நாடு முழுவதும் ஷராமிக் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

manipur cm,corona virus,isolation,arrest ,மணிப்பூர் முதல்வர்,கொரோனா வைரஸ்,தனிமைப்படுத்துதல்,கைது

இந்த நிலையில், மணிப்பூர் திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் கூறியதாவது:- நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் மணிப்பூர் திரும்பும் மக்கள் கட்டாயம் தங்களைத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும், தவறினால் நிச்சயம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மணிப்பூருக்குத் திரும்பும் தொழிலாளர்களுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என இருக்கும் பட்சத்தில் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :