Advertisement

நியாயவிலைக் கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

By: vaithegi Thu, 27 July 2023 1:20:53 PM

நியாயவிலைக் கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

சென்னை: ரேஷன் கடைகள் ஜூலை 30ல்( ஞாயிற்றுக்கிழமை ) இயங்கும்கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்ட விண்ணப்பங்களைப்‌ பதிவு செய்யும்‌ முகாமை முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ கடந்த 24- ம் தேதி தொப்பூர்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌ நடைபெற்ற விழாவில்‌ தொடங்கி வைத்தார்‌. விண்ணப்பப்‌ பதிவு முகாம்களை 2 கட்டங்களாக நடத்தத்‌ திட்டமிடப்பட்டு உள்ளது

இதையடுத்து முதற்கட்டமாக 20,765 நியாய விலைக்‌ கடைகளில்‌ இருக்கும்‌ குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல்‌ 04.08.2023 வரை விண்ணப்பப்‌ பதிவு முகாம்கள்‌ நடைபெற்று வருகின்றன. நியாய விலைக்‌ கடை பணியாளர்கள்‌ ஒவ்வொரு வீடாக விண்ணப்பங்களையும்‌, டோக்கன்களையும்‌ விநியோகம்‌ செய்து கொண்டு வருகின்றனர்‌.

fair price shops,distribution , நியாயவிலைக் கடைகள்,விநியோகம்‌

முதற்கட்ட விண்ணப்பப்‌ பதிவு முகாம்களில்‌ முதல்‌ 3 நாட்களில்‌, 26.07.2023, மாலை 6.00 மணி வரை 36,06,974 விண்ணப்பங்கள்‌ இணையதளம் வழி பெறப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில்‌ விண்ணப்பங்களைப்‌ பதிவு செய்வதற்கு 34,360 தன்னார்வலர்கள்‌ பணியாற்றி கொண்டு வருகின்றனர்‌.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து நியாயவிலை கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என உணவுத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே இதற்கு ஈடாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம் நடைபெறும் நிலையில் உணவுத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பிவுள்ளார்.

Tags :