Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போலியான மின்னஞ்சல்... பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

போலியான மின்னஞ்சல்... பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

By: Nagaraj Sat, 20 Aug 2022 10:47:57 PM

போலியான மின்னஞ்சல்... பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள மக்கள் பலருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது. இது போலியான மின்னஞ்சல் அதனுடன் உள்ள லிங்கை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பிய சைபர் குற்றவியல் ஏஜன்சியின் முத்திரையுடன் வரும் அந்தக் கடிதத்துடன் ஒரு PDF இணைக்கப்பட்டுள்ளது.

link,alert,email,police,authorities,contact ,லிங்க், எச்சரிக்கை, மின்னஞ்சல், போலீசார், அதிகாரிகள், தொடர்பு

அதில், நீங்கள் தவறான புகைப்படங்களை விநியோகிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தாங்கள் அப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பவில்லை என போலீசார் தெரிவித்துள்ளார்கள். அத்துடன், அது ஒரு போலியான மின்னஞ்சல் என்று கூறியுள்ள போலீசார், அந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ள லிங்க் எதையும் கிளிக் செய்யவேண்டாம் என்றும் மக்களை எச்சரித்துள்ளார்கள்.

Tags :
|
|
|
|