Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லில்லி இலையின் மீது அமர்ந்து யோகசனங்கள் செய்து அசத்திய இளம்பெண்

லில்லி இலையின் மீது அமர்ந்து யோகசனங்கள் செய்து அசத்திய இளம்பெண்

By: Nagaraj Sat, 18 July 2020 11:19:38 AM

லில்லி இலையின் மீது அமர்ந்து யோகசனங்கள் செய்து அசத்திய இளம்பெண்

வட்ட வடிவ லில்லி இலையின் மீது இளம் பெண் அமர்ந்து பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்தினார்.

சீனாவின் யுனான் மாகாணத்தில் வட்டவடிவ லில்லி இலையின் மீது அமர்ந்து இளம் பெண் ஒருவர் யோகா செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. அங்குள்ள நீர்நிலை ஒன்றில் 10 அடி விட்டம் கொண்ட இலையின் நடுவே இளம்பெண் ஒருவர் அமர்ந்து பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தார்.

social website,lily leaf,girl yogasana,asathal ,சமூக வலைதளம், லில்லி இலை, பெண் யோகாசனம், அசதத்தல்

விக்டோரியா அமேசானிக்கா என்ற தாவரப் பெயருடைய பிரமாண்ட லில்லி இலை 50கிலோ எடை கொண்டவர்களையும் தாங்கும் வலிமை உடையதாகும். இத்தகைய லில்லி இலையின் மீது அமர்ந்து அந்த பெண் செய்யும் யோகாசனங்கள் வீடியோ தற்போது பார்ப்பவர்களை அசர அடித்து வருகிறது.

இதை பலரும் தங்களில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :