Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புற்றுநோயால் காலமானார் பிரபல ஹாலிவுட் நடிகை கெல்லி பிரஸ்டன்

புற்றுநோயால் காலமானார் பிரபல ஹாலிவுட் நடிகை கெல்லி பிரஸ்டன்

By: Nagaraj Tue, 14 July 2020 10:52:29 AM

புற்றுநோயால் காலமானார் பிரபல ஹாலிவுட் நடிகை கெல்லி பிரஸ்டன்

நடிகையும், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் டிரவோல்டாவின் மனைவியுமான கெல்லி பிரஸ்டன் (57) புற்றுநோயால் காலமானார்.

மார்பக புற்றுநோயால் அவதியுற்று வந்த கெல்லி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் நடிகர் ஜான் டிரவோல்டா பதிவிட்டுள்ளதாவது;

என் அழகான மனைவி கெல்லி மார்பக புற்றுநோயால் 2 வருட போராட்டத்தில் தோல்வி அடைந்து விட்டாள். அவர் பலரின் அன்பு மற்றும் ஆதரவுடன் ஒரு தைரியமான வாழ்வை எதிர்கொண்டார்.

cancer,deceased,actress kelly,posted ,புற்றுநோய், காலமானார், நடிகை கெல்லி, பதிவிட்டுள்ளார்

புற்றுநோய் மையத்தில் உள்ள அவரது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், உதவி செய்த அனைத்து மருத்துவ மையங்களுக்கும், அவளுடைய பல நண்பர்கள் மற்றும் அவரது பக்கத்திலிருந்த அன்பானவர்களுக்கும் எனது குடும்பமும் நானும் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

கெல்லியின் அன்பும் வாழ்க்கை எப்போதும் நினைவில் இருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
|