Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் 2 மடங்காக உயர்வு..ஜூலை 1 முதல் அமல்

வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் 2 மடங்காக உயர்வு..ஜூலை 1 முதல் அமல்

By: vaithegi Sat, 25 June 2022 7:05:04 PM

வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் 2 மடங்காக உயர்வு..ஜூலை 1 முதல் அமல்

தமிழகம்: தமிழகத்தில் இருந்து வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாவாக பலரும் அமீரகம், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து நேரடியாக விமான சேவைகள் இருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே இந்த வழித்தடங்கள் வழியாக பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. மேலும், சென்னையிலிருந்து துபாய்க்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்நிலையில், திடீரென தமிழகம் மற்றும் தென் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமான கட்டணங்களையும் 2 மடங்காக உயர்த்தவுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

abroad,fees ,வெளிநாடு, கட்டணம்


சென்னை முதல் அபுதாபி செல்லும் விமானம், திருவனந்தபுரம் முதல் துபாய் செல்லும் விமானம், கொச்சி முதல் துபாய் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் விலை அதிகரிப்பு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது தான் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் பலரும் இந்தியாவிற்கு வர இருக்கின்றனர்.

இந்த சமயத்தில் விமானங்களின் டிக்கெட் விலை அதிகரித்துள்ளதால் பயணிகள் மிகவும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் டிக்கெட் விலை உயர்ந்திருக்கும் என கூறப்படுகிறது.

Tags :
|