Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உரிய விலை கிடைக்காததால் காலிஃப்ளவர் செடிகளை அழித்த விவசாயி

உரிய விலை கிடைக்காததால் காலிஃப்ளவர் செடிகளை அழித்த விவசாயி

By: Nagaraj Fri, 18 Dec 2020 7:47:10 PM

உரிய விலை கிடைக்காததால் காலிஃப்ளவர் செடிகளை அழித்த விவசாயி

உரிய விலை கிடைக்காதததால் வெறுப்படைந்து பயிரிட்ட காலிஃப்ளவர் செடிகளை அழித்துள்ளார் விவசாயி ஒருவர்.

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் மாயபுரி கிராமத்தை சேர்ந்த விவசாயியான ரமேஷ். இவர் தனது நிலத்தில் காலிஃப்ளவர் செடியை பயிரிட்டுள்ளார். தற்போது காலிஃப்ளவரை அறுவடை செய்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார்.

ஆனால், விவசாயியை அனுகிய தனியார் விற்பனையாளர்கள் காலிஃப்ளவரை கிலோக்கு 1 ரூபாய் மட்டுமே விலை நிர்ணயம் செய்து எடுத்துக்கொண்டனர்.

cauliflower,demand,cultivator,destruction,appropriate price ,காலிஃப்ளவர், கோரிக்கை, விவசாயி, அழிப்பு, உரிய விலை

காலிஃப்ளவர் பயிரிட்டு அதை அறுவடை செய்ய ஆன தொகையை விட விற்பனையாளர்கள் நிர்ணயித்த தொகை மிக மிகக்குறைவாக இருந்தது.

இதனால், வேதனையடைந்த ரமேஷ் தான் பயிரிட்ட எஞ்சிய காலிஃப்ளவர் செடிகளை டிராக்டரை கொண்டு அழித்தார். இது மற்ற விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிகுந்த சிரமத்திற்கு இடையில் பயிரிட்ட பயிரை தகுந்த விலை கிடைக்காததால் அழித்துள்ளார் இவர்.
இருப்பினும் இதுகுறித்த்து அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பயிரிடும் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|