Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரு போக சம்பா சாகுபடிக்காக வயலை உழும் பணியில் விவசாயிகள் மும்முரம்

ஒரு போக சம்பா சாகுபடிக்காக வயலை உழும் பணியில் விவசாயிகள் மும்முரம்

By: Nagaraj Mon, 18 Sept 2023 6:34:31 PM

ஒரு போக சம்பா சாகுபடிக்காக வயலை உழும் பணியில் விவசாயிகள் மும்முரம்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஒரு போக சம்பா சாகுபடிக்காக வயலை தயார்படுத்தும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.

நடப்பாண்டு மேட்டூர் அணை வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்தது.

farmers,plantation,kurvai,cultivation works,tennangudi ,விவசாயிகள், நாற்று நடும், குறுவை, சாகுபடி பணிகள், தென்னங்குடி

தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம், ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம் உட்பட பல பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் நடந்துள்ளது.

இந்நிலையில் தஞ்சை அருகே 8.கரம்பை பகுதியில் குறுவை மேற்கொள்ளாத சில விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியில் இறங்கி உள்ளனர். கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருவதை பயன்படுத்தி விவசாயிகள் வயலை உழுது சமன்படுத்தி ஒரு போக சம்பா சாகுபடிக்காக மும்முரம் காட்டி வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் நாற்று நடும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
|