Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி ...அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய...விவசாய சங்கத்தினர் கோரிக்கை

தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி ...அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய...விவசாய சங்கத்தினர் கோரிக்கை

By: vaithegi Tue, 09 Aug 2022 3:15:25 PM

தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி ...அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய...விவசாய சங்கத்தினர் கோரிக்கை

சென்னை: தமிழக அரசு விவசாயிகளுக்கு பல பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதை தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டங்களுக்காக குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் மழை காலங்களில் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் புதிய புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள், வை பை இணையதள வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதை தவிர தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த குடும்ப பெண்களுக்கு ரேஷன் கடைகளில் மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ration,onion , ரேஷன் ,வெங்காயம்

அதேசமயம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக சின்ன வெங்காயத்தின் விலை சரிந்து இருக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் 45 நாட்கள் ஆன சின்ன வெங்காயத்தை நோய் தாக்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சின்ன வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் தமிழக அரசு ஆணைப்படி கோயம்புத்தூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் தூய்மை பணி மற்றும் பொதுப் பணியாளர் சங்க பொதுச்செயலாளர்கள் மனு அளித்துள்ளனர்.

Tags :
|